கோலாகலமாக நடந்து முடிந்தது அம்பானி மகன் திருமணம்!!
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் - ஷ்லோகா தம்பதியரின் திருமணம் மும்பையில் விமர்சையாக நடைபெற்றது.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் - ஷ்லோகா தம்பதியரின் திருமணம் மும்பையில் விமர்சையாக நடைபெற்றது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதையொட்டி, பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள், வெளிநாட்டு பிரமுகர்கள் என முக்கிய விருந்தினர்கள் குவிந்தனர்.
ஐ.நா. சபை முன்னாள் பொது செயலாளர் பான் கி மூன், அவர்து மனைவி யோ சூன் டீக், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அவரது மனைவி செர்ரி பிளேர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.