லக்னோ : உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவருமான அகிலேஷ் யாதவ் தந்தைக்குப் போட்டியாக 235 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உ.பி.யில் முதல்வராக அகிலேஷ் யாதவ் உள்ளார். அவருக்கும், அவரது சித்தப்பாவும், உ.பி., மாநில, சமாஜ்வாதி கட்சி தலைவருமான, சிவ்பால் யாதவுக்கும், அதிகாரப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மொத்தம் உள்ள, 403 தொகுதிகளில், 325 தொகுதிகளுக்கான, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பட்டியலை, முலாயம் சிங், நேற்று முன்தினம் வெளியிட்டார். 


ஆனால், கட்சி விரோத நடவடிக்கை காரணமாக சிவ்பால் யாதவ் உள்ளிட்ட 10 அமைச்சர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 


இதன்பின் கட்சித் தலைவர், முலாயம் சிங்கை சந்தித்து தன் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து முதல்வர் அகிலேஷ் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார்.


இந்நிலையில் முலாயம் சிங் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலுக்கு போட்டியாக, அகிலேஷ் யாதவும் 235 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் தன் ஆதரவாளர்களுக்கு அதிக இடம் ஒதுக்கியுள்ளார். 


முன்னதாக, 325 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட முலாயம் சிங் யாதவ், எஞ்சியுள்ள 78 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.