தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: சமாஜ்வாதி கட்சி கூட்டத்தில் அகிலேஷ் யாதவ்!!
சமாஜ்வாதி கட்சியை உடைத்து தனிக்கட்சியை தொடங்கப் போவதாக வெளிவந்த செய்திகள் பொய் என்று உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
லக்னோ: சமாஜ்வாதி கட்சியை உடைத்து தனிக்கட்சியை தொடங்கப் போவதாக வெளிவந்த செய்திகள் பொய் என்று உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
அகிலேஷ் யாதவின் சித்தப்பா சிவ்பால் யாதவ் உட்பட 4 அமைச்சர்களை நீக்கினார். அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை முலாயம்சிங் யாதவ் லக்னோவில் கூட்டினார்.
தனக்கு எதிராக கட்சிக்குள்ளேயே சதி நடந்து வருவதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். மற்றும் சமாஜ்வாதி கட்சியை உடைத்து தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய் எனவும் கூறியுள்ளார். முலாயம்சிங் யாதவ் விரும்பினால் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றும் அரசியல்தான் என்னுடைய வாழ்க்கை எனவும் அகிலேஷ் கூறியுள்ளார்.