சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையை அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்
உபி, பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
லக்னோ: உபி, பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
உபி மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சி இம்முறை காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. சமாஜ்வாடி கட்சி 298 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையை, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரியும், அக்கட்சியின் தேசிய தலைவருமான அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டார்.
மாநில வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தப்படும், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும், மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், காவல் துறையை நவீனப்படுத்தப்படும் திட்டம், பறக்கும் சாலைகள் அமைத்தல், ஜனேஷ்வர் மிஷ்ரா மாதிரி கிராம முன்னேற்ற திட்டம், விவசாயிகளுக்கு உரம், விதை ஆகியவை எளிய முறையில் பெறுவதற்கான திட்டம் ஆகியவை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அகிலேஷ் யாதவ்:-
கடந்த 2012-ம் ஆண்டில் ஆட்சிக்கு வரும் போது நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.