நாட்டின் பிரதமராக வருவீர்கள் என்று நினைத்ததுண்டா? - நடிகர் அக்‌ஷய்குமார் நேர்காணலில் பிரதமர் மோடி பதில்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நான் சன்னியாசியாக வேண்டும் என்றுதான் நினைத்தேன், பிரதமராக வேண்டும் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. எனக்கு கோபம் வராததை பார்த்து  மக்கள் ஆச்சர்யபடுகிறார்கள். கோபப்படும் அளவுக்கு நான் எந்த சூழலையும் உருவாக்கி கொள்ளவில்லை. எனக்கு கோபம் வரும் அதை நான் ஒருபோதும் வெளிக்காட்டியதில்லை.  எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பு வரை எனக்கு வங்கி கணக்கு கிடையாது. 


சிறுவயதிலேயே நான் எனது தாயை விட்டு பிரிந்து வந்து விட்டேன். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று நினைத்தேன். வரலாறு போற்றும் தலைவர்களின் சுயசரிதைகளை படிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. எதிர்க்கட்சிகளில் பல நண்பர்கள் எனக்கு உள்ளனர். 



பாலிவுட் நடிகர் அக்சய் குமாருடன் மனம் விட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி!!


இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்சய்குமாருடன் சிறிது மனம் விட்டு கலந்துரையாடியுள்ளார் பிரதமர் மோடி. அப்போது அவர், தினமும் சற்று அதிகமான நேரத்தை தூங்குவதற்கு ஒதுக்க வேண்டும் என்று தம்மிடம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மூன்று மணி நேரம் மட்டுமே உறங்குவதாக கூறிய மோடியிடம் நடிகர் அக்சய் குமார் பேட்டியெடுத்த போது மோடி இவ்வாறு கூறினார்.



மேலும், அரசியல் தவிர்த்து மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், எண்ணங்கள், ரசனை குறித்து பேட்டியெடுக்கப் போவதாக அக்சய் குமார் தமது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். அடுத்த ஆறு மணி நேரங்களில் அவர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேட்டியெடுத்தார்.



எந்த கேள்விக்கும் சளைக்கமாமல் மனம் விட்டு பேசிய மோடி, தமக்கு மாம்பழங்கள் பிடிக்குமா என்பது குறித்தும் உண்மையில் தாம் குஜராத்தி தானா , பிரச்சாரத்தின் தீவிரத்திற்கு இடையில் வாய்விட்டு சிரிப்பதுண்டா என்பது குறித்தும் கருத்துகளை வெளியிட்டுள்ளார். பிரதமர் அலுவலக இல்லமான டில்லியில் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நெம்பர் 7, லோக் கல்யாண் மார்க் , நடந்த இந்த கலந்துரையாடலின் வீடியோ காட்சிகள் இன்று காலை 9 மணியளவில் ஒளிபரப்பாக உள்ளது.