புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.33 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,300 பேர் இறந்த நிலையில், இந்தியா மிக அதிக ஒற்றை நாள் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 2,34,692  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 16,79,740 ஆக உள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசிக செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 12 கோடியை எட்டியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் அதிகப்படியான தினசரி தொற்று எண்ணிக்கையைக் கொண்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 63,729 பேருக்கு புதிதாக COVID-19 தொற்றுநோய் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 398 பேர் தொற்றால் இறந்தனர். மாநிலத்தில் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை இப்போது 37,03,584 ஆக உள்ளது.


இந்தியாவின் கோவிட் -19 நெருக்கடி: முக்கிய அம்சங்கள்: 


- 2021 ஏப்ரல் 16 வரை COVID-19-க்கு 26,49,72,022 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நேற்று மட்டும் 14,95,397 மாதிரிகளில் சோதனை செய்யப்பட்டன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


- டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று COVID-19 நிலைமை குறித்து மறுஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளார்.
COVID-19 நிர்வாகத்துக்கான நோடல் அமைச்சர் மனீஷ் சிசோடியா, சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் பிற அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.


ALSO READ: கொரோனா வைரஸால் இன்னும் மோசமான நிலை ஏற்படும்: நிதின் கட்கரி!


- செப்டம்பர் மாதத்திற்குள் 10 கோடி அளவை எட்டுவதற்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசியான (Vaccine) கோவாக்சின் உற்பத்தியை பத்து மடங்கு அதிகரிக்கவும் ஆன்டிவைரல் மருந்து ரெம்டிசிவிர் உற்பத்தியை துரிதப்படுத்தவும் பல வித திட்டங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
 
- கடந்த சில நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவ தர ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி அதன் போதுமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். மேலும் அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களை எடுத்துச்செல்லும் லாரிகளின் தடையற்ற போக்குவரத்தை ஏதுவாக்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.


- மறுபுறம், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மக்கள் தொற்றுநோய் குறித்து சாதாரண அணுகுமுறைக்கு வந்துவிட்டனர் என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது மிகவும் ஆபத்தான விஷயம் என்றும், COVID குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்த சங்கிலியை உடைப்பதற்கான மிகப்பெரிய சமூக கருவியாகும் என்றும் அவர் கூறினார்.


- டெல்லியில் உள்ள சந்தை சங்கங்கள் டெல்லியில் COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தன. லாக்டவுன் ஒரு தீர்வாகாது என்றும் COVID-19 நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் சங்கங்கள் கேட்டுக்கொண்டன. 


- லான்செட் கோவிட் -19 கமிஷனின் அறிக்கை, கொரோனா வைரஸின் (Coronavirus) அபாயகரமான இரண்டாவது அலை 2021 ஜூன் முதல் வாரத்திற்குள் இந்தியாவில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1,750-2,320 உயிர்களைப் பறிக்கும் என்று எச்சரித்துள்ளது. அதன் பரவலைத் தடுக்க உடனடியாக சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ALSO READ: தமிழகத்தில் ஆட்டம்போடும் கொரோனா, சென்னையில் 100 போலீசாருக்கு தொற்று


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR