தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை எட்டியதுள்ளது.
கொரோனாவின் (Coronavirus) முதல் அலையைவிட 2-வது அலை மிகவும் வீரியமாக தாக்கி வருவது மத்திய, மாநில அரசுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்த தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசு (Central Government) தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில் (Chennai) நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் (Tamil Nadu) முழுவதும் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தொட்டுள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரத் துறை கூறப்பட்டிருப்பதாவது.,
தமிழகத்தில் நேற்று புதிதாக 82 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 203 ஆண்கள், 2 ஆயிரத்து 781 பெண்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 984 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 225 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,052 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
ALSO READ | தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- தமிழக அரசு!
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 482 பேரும், செங்கல்பட்டில் 771 பேரும், கோவையில் 504 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 9 பேரும், பெரம்பலூரில் 3 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 3,289 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 853 பேரும், கோவையில் 369 பேரும், செங்கல்பட்டில் 310 பேரும் அடங்குவர். இதுவரையில் 8 லட்சத்து 84 ஆயிரத்து 199 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 49 ஆயிரத்து 985 பேர் உள்ளனர். மேலும் சென்னை காவல் துறையில் 100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை சென்னை போலீசில் 7 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது தினமும் வழக்கு போடப்படுகிறது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR