அதிகரிக்கும் Mucormycosis நோயாளிகள்: 50% இறப்பு விகிதத்துடன் தயாராகிறது அடுத்த நோய்!!
இந்த நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 50% பேர் இறக்கிறார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து இந்த நோயின் தீவிரம் தெரிகிறது. இந்த சூழ்நிலையில், இப்போது இந்த மாநிலங்களில் Mucormycosis ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
புதுடெல்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. பல உச்சங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த தொற்றை கட்டிப்படுத்த முடியாமல் மக்களும் நிர்வாகமும் திகைத்து நிற்கின்றன.
நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 2,33,40,938 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 2,54,197 ஆகவும் உள்ளது. இன்னும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றுக்கு (Coronavirus) மத்தியில் புதிய சிக்கல் ஒன்று சேர்ந்துள்ளது. இந்த சிக்கலின் பெயர் Mucormycosis என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகளுக்கு மத்தியில் தற்போது Mucormycosis-க்கான அறிகுறிகளும் தென்பட்டு வருகின்றன.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் 50% பேர் இறக்கின்றனர்
நாட்டின் மூன்று மாநிலங்களில் Mucormycosis-ன் கொடூரம் மிக அதிகமாக உள்ளது. இந்த நோய் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மாநிலத்தில் 2000 க்கும் மேற்பட்டோர் Mucormycosis நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோபே கூறியுள்ளார். இந்த நோய் குஜராத் மற்றும் ராஜஸ்தானிலும் பரவியுள்ளது.
ALSO READ: நீண்ட உபாதைகள் இருப்பவர்களுக்கு புதிய கருப்புப் பூஞ்சை உருவாகிறது: ICMR!
இந்த நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 50% பேர் இறக்கிறார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து இந்த நோயின் தீவிரம் தெரிகிறது. இந்த சூழ்நிலையில், இப்போது இந்த மாநிலங்களில் Mucormycosis ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
பதட்டத்தை அதிகரிக்கிறது Mucormycosis
Mucormycosis-ன் அறிகுறிகளில் கருப்பு பூஞ்சையும் (Black Fungus) உள்ளது. இதன் காரணமாக 50 சதவீத நோயாளிகள் இறக்கிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் தப்பினாலும், அவர்களது கண் பார்வை பறிபோவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தலைவலி, காய்ச்சல், கண்கள் மற்றும் மூக்கில் கடுமையான வலி ஆகியவை இந்த நோயின் பிற அறிகுறிகளாகும்.
குஜராத் மற்றும் ராஜஸ்தானில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்
குஜராத் மற்றும் ராஜஸ்தானிலும் Mucormycosis ஆல் பலர் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குஜராத்தில் கருப்பு பூஞ்சை அறிகுறிகளைக் கொண்ட கிட்டத்தட்ட நூறு பேர் பதிவாகியுள்ளனர். குஜராத்தின் ராஜ்கோட்டில் இதற்காக தனி மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. Mucormycosis-க்கான தனி வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ALSO READ: கோவிட் நோயாளிகளைத் தாக்கும் Black Fungus தொற்று எவ்வளவு ஆபத்தானது?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR