ஹைதராபாத்: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் சார்பு துணைவேந்தராக இருந்த ஒரு மூத்த இயற்பியலாளர், இந்தியாவில் கோவிட் -19 இன் மூன்றாவது அலை அநேகமாக (3rd Wave of COVID-19) ஜூலை 4 முதல் தொடங்கியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 463 நாட்களில் நாட்டில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையைப் பற்றி ஆய்வு செய்வதற்கான சிறப்பு வழியை உருவாக்கிய டாக்டர் விபின் ஸ்ரீவாஸ்தவா, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரம் இரண்டாவது அலை தொடங்கியது போல் ஜூலை 4 தேதி மூன்றாவது அலை பரவத் தொடங்கியது போல்  (Covid 19 Spread) தற்போது தெரிகிறது. விஞ்ஞானியின் பகுப்பாய்வின்படி, தொற்றுநோயிலிருந்து தினசரி இறப்பு நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கில் இருந்து குறைந்து வரும் போக்குக்கு நகரும் போதெல்லாம் டெய்லி டெத் லோட் (DDL) கடுமையாக மாறுபடுகிறது.


ALSO READ | COVID-19 தொற்று பரவலை மாத அடிப்படையில் குறிப்பிடவில்லை: அரசு விளக்கம்


ஸ்ரீவாஸ்தவா குறிப்பாக 24 மணி நேர காலப்பகுதியில் நோய்த்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையையும் அதே காலகட்டத்தில் சிகிச்சையில் உள்ள புதிய நோயாளிகளின் எண்ணிக்கையையும் கணக்கிட்டு அதற்கு டிடிஎல் என்று பெயரிட்டார். "டிடிஎல்லில் இந்த ஏற்ற இறக்கம் பிப்ரவரி முதல் வார இறுதியில் தொடங்கும் என்று நாங்கள் கண்டோம். இருப்பினும், அந்த நேரத்தில் நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 100 அல்லது அதற்கும் குறைவான வரிசையில் இருந்தது, மேலும் தொற்றுநோயின் முடிவின் மாயையில் இருந்தோம். ஆனால் பின்னர் நிலைமை மோசமாக மாறியது. இதேபோன்ற போக்கின் தொடக்கத்தை ஜூலை 4 முதல் காணபபட்டு வருகிறது என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.


மத்திய சுகாதார அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட சமீபத்திய தகவல்களின்படி, இந்தியாவில் ஒரு நாளில் 37,154 புதிய கோவிட் -19 தொற்றுக்கள் பதிவாகிய பின்னர், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,74,376 ஆக அதிகரித்துள்ளது. அமைச்சின் கூற்றுப்படி, நாட்டில் மேலும் 724 பேர் இறந்த பின்னர், இறப்பு எண்ணிக்கை 4,08,764 ஆக அதிகரித்துள்ளது. செயலில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை 4,50,899 ஆக குறைந்துள்ளது.


ALSO READ | கொரோனா 3வது அலை: அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடையும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR