கொடிய கொரோனா வைரஸ் வெடிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், அலிகார் பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயிர்கொல்லி நோயாக கருதப்படும் கொரோனா வைரஸ் இதுவரை இந்தியாவில் 43 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக, கேரளா, முர்ஷிதாபாத் (மேற்கு வங்கம்), கிஷன்கர் (பீகார்) மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் இருந்து பயிலும் தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்து ஒத்திவைக்கப்படுவதாக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகள் ஆனது மார்ச் 15-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.


இதுகுறித்து தொலைதூரக் கல்வி இயக்குநர் பேராசிரியர் நஃபீஸ் அன்சாரி தெரிவிக்கையில்., நான்கு பட்டப்படிப்புகளில் (பி.காம், எம்.காம், நூலக அறிவியல் இளங்கலை, பி.எஸ்சி கம்ப்யூட்டர்) பயில்வதற்காக சுமார் 6000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இவர்கள் அனைவரும் ஏப்ரல் 1, 2020 அன்று தேர்வில் பங்கேற்பார்கள். கொரோனா வைரஸின் பயத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் நஃபீஸ் அன்சாரி தெரிவித்துள்ளார். மேலும் வெகுஜன கொண்டாட்டங்களைத் தவிர்க்க பல்கலைக்கழக மானிய ஆணையமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையிலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


அதேவேளையில் PG டிப்ளோமா படிப்புகள் தொடர்பான பிற தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் கால அட்டவணையின்படி நடைபெறும் என்றும் பேராசிரியர் அன்சாரி தெரிவித்துள்ளார்.