கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக MPLAD நிதியில் இருந்து ரூ .1 கோடியை விடுவிக்க அனைத்து பாஜக MP-க்களுக்கு கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக அனைத்து கட்சி எம்.பி.க்களும் தங்கள் வருடாந்திர மேம்பாட்டு நிதியிலிருந்து மத்திய நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடியை விடுவிப்பதாக பாஜக தலைவர் ஜே.பி.நடா சனிக்கிழமை அறிவித்தார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பக்கத்தில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தையும் நன்கொடையாக வழங்குவார்கள் என்றும் கூறினார்.


கொரோனா பரவுதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டத்தை அறிவித்துள்ளார்.


கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக பெரும் நிதி தேவைப்படுகிறது. இதற்காக நிதி திரட்டும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்காக வங்கி கணக்கு ஒன்றை ஏற்படுத்தி நிதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் பாஜக எம்.பி,க்கள் அனைவரும் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கரோனா தடுப்புக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள நிதிக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிடடுள்ளார்


"பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கோவிட் 19 க்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்பதற்காக மத்திய நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியம் / சம்பளத்தை நன்கொடையாக வழங்குவார்கள். பாஜகவின் அனைத்து எம்.பி.க்களும் தங்கள் எம்.பி.எல்.ஏ.டி.எஸ் நிதியிலிருந்து ரூ .1 கோடியை மத்திய நிவாரண நிதிக்கு விடுவிப்பார்கள். கோவிட் -19 க்கு எதிராக போராடுங்கள், "என்று அவர் கூறினார்.


தற்போது, கட்சியில் 386 எம்.பி.க்கள் உள்ளனர் - மக்களவையில் 303, மாநிலங்களவையில் 83 பேர். பாராளுமன்ற உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் (MPLADS) உறுப்பினர்களின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு MP-க்கு ரூ.5 கோடி கிடைக்கும்.