ஊரடங்கு நீட்டிப்பால் உள்நாடு நாற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் அனைத்தும் வரும் மே 3 ஆம் தேதி வரை ரத்து செய்யபட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி காலை காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இந்நிலையில், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு, மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். 


இதைத் தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்தது. நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, பயணிகள் விமான சேவையும் மே 3 வரை ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.


முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனையின்போது கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து சேவையைத் தொடரக் கூடாது என மாநில முதல்வர்கள் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.