ஜனவரி 8ம் தேதி வங்கி ஊழியர்கள் பொது வேலை நிறுத்தம்
இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், வரும் ஜனவரி 8ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், வரும் ஜனவரி 8ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பின்மை, விலைவாசியேற்றம், போன்ற பல பிரச்சினைகள் நாட்டில் நிலவி வருகின்றன. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை போன்ற சில முக்கிய பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டெ செல்கிறது. மேலும் ஊதிய விகிதம் மற்றும் ஓய்வூதியம் குறித்த சட்ட திருத்தங்களால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, மத்திய வர்த்தக தொழிற்சங்கங்கள் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தன.
இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், ஹிந்த் மஸ்தூர் சபா, தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பு, சுயதொழில் செய்யும் பெண்கள் சங்கம், அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம் போன்ற சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்
இதில் மொத்தம் 10 முக்கிய தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், வாராகடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தோழமை சங்கங்களுடன் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தன.
இந்நிலையில் ஜனவரி 8-ஆம் தேதி நடக்கும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில், 5 வங்கி ஊழியர் சங்கங்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் பங்கேற்க உள்ளன. இதனால் அன்றைய தினம் வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.