புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஞாயிற்றுக்கிழமை தனது அரசாங்கத்தின் பணிகளைப் பாராட்டியதோடு, தனது அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் காரணமாக, இன்று கிட்டத்தட்ட இரண்டு கோடி வீடற்ற மக்களுக்கு பக்கா வீடுகள் கிடைத்துள்ளன என்றும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்வமித்வா திட்டத்தின் (SVAMITVA Scheme) கீழ் சொத்து அட்டைகளை விநியோகிக்கும் அறிமுக நிகழ்வில் பொதுமக்களிடம் உரையாற்றிய பிரதமர், '' பல தசாப்தங்களாக, நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு இல்லாமல் இருந்தது. ஆனால் எங்களது ஆட்சியின் கீழ் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் காரணமாக கிராமங்களில் உள்ள சுமார் இரண்டு கோடி ஏழை குடும்பங்களுக்கு தற்போது பக்கா வீடுகள் கிடைத்துள்ளன.” என்று கூறினார்.


இன்றைய தேதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பிரதமர் மோடி, '' வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளில் இதுபோன்ற பெரிய பணிகள் செய்யப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று, லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோரின் பிறந்த நாள்'' என்று கூறினார்.


'கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் கிராமப்புறங்களில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மேப்பிங்' (SVAMITVA) திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளின் விநியோகத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.


ALSO READ: Digital India: ஆதார் அட்டை போல், SVAMITVA சொத்து அட்டைகளை பிரதமர் மோடி வழக்குகிறார்


SVAMITVA திட்டத்தின் பயனாளிகள் ஆறு மாநிலங்களில் 763 கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 346, ஹரியானாவிலிருந்து 221, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 100, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 44, உத்தராகண்டிலிருந்து 50, கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு கிராமங்கள் உள்ளன. இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்கும் படிப்படியாக விரிவாக்கப்படும்.


மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மகாராஷ்டிராவைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களில் உள்ள பயனாளிகளும் ஒரு நாளுக்குள் சொத்து அட்டைகளைப் பெறுவார்கள். மகாராஷ்டிராவில் சொத்து அட்டையின் பெயரளவு தொகையைப் பெறும் முறை உள்ளது. எனவே அங்கு இந்த இந்த செயல்முறை முடிய ஒரு மாதம் ஆகலாம்.


தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி (PM Modi), இந்த ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ், சொத்து அட்டைகள் வழங்கப்படும் நாள் கிராமப்புற வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான நாள் என்று கூறினார்.


குறிப்பிடத்தக்க வகையில், SVAMITVA திட்டம் ஏப்ரல் மாதத்தில் பிரதமரால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ். கிராமப்புறங்களில் சொத்து வைத்திருப்பவர்களுக்கு ‘சொத்து அட்டை’ (Property Cards) வழங்கப்படும். இந்த சொத்து அட்டை, சொத்தின் மீதான அவர்களது உரிமைக்கு அங்கீகாரம் அளிக்கும். இந்த சொத்து அட்டைகளை பயன்படுத்தி கிராமப்புற மக்கள் வங்கிகளில் கடன் வசிதிகளைப் பெற முடியும். 


ALSO READ: ஊரக பகுதியில் 100% குழாய் நீர் வழங்கும் மோடியின் கனவு திட்டத்தை நனவாக்கிய கோவா..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR