பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதல்வராக நவோஜத் சிங் சித்து விரும்புகின்றார் என அம்மாநில முதல்வர் அமரேந்திர சிங் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலுக்கான ஏழாம் கட்ட வாக்குப்பதிவு இன்று வாரணாசி உள்பட 59 தொகுதிகளில் நடைப்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று தனது வாக்கினை பதிவு செய்த பஞ்சாப் முதல்வர் அமரேந்திர சிங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்.,


பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதல்வராக நவோஜத் சிங் விரும்புகின்றார். நான் இருக்கும் இடத்தில் தான் இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம் என தெரிவித்துள்ளார். மேலும் தேவையில்லா நேரங்களில் அர்த்தமற்ற கருத்துகளை வெளியிட்டு கட்சியின் பெயரை கெடுப்பதும் அவர் தான் எனவும் சித்துவை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.


சில தினங்களுக்கு முன்னதாக சண்டிகர் தொகுதியில் தனது மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததற்கு காரணம் பஞ்சாப் முதல்வர் தான் என சித்து குற்றம் சாட்டினார். பின்னர் பதித்திண்டா (அ) அமிர்தஸ்டர் தொகுதியில் சித்துவின் மனைவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது., எனினும் அவர் இந்த வாய்ப்பினை மறுத்துவிட்டார்.


இது ஒரு புறம் இருக்க இதுகுறித்து அமரேந்திர் சிங்கிடம் கேள்வி எழுப்புகையில்., சித்துவிற்கும் தனக்கும் இது தொடர்பாக எவ்வித கசப்பும் இல்லை. மக்கள் முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றனர். அந்த வகையிலேயே சித்துவும் முயற்சிக்கின்றார். அவரை நான் சிறு வயது முதல் பார்த்து வருகின்றேன்., என் கனிப்பின் படி பஞ்சாபின் அடுத்த முதல்வராக தான் சித்து விரும்புகின்றார். நான் இருக்கும் இடத்தில் தன்னை வைத்து பார்க்க விரும்புகின்றார் என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர் கட்சியின் பெயருக்கு கலங்கம் ஏற்பட சித்துவே காரணம் என தெரிவித்த அவர், சித்துவின் செயல்களால் கட்சிக்கு தான் அவப்பெயர், அவருக்கு இல்லை எனவும் விமர்சித்தார். மேலும் வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனவும் உறுதி தெரிவித்தார். முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றால் தான் தனது பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என அமரேந்திர் சிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.