வடக்கு சிக்கிமில் சுமார் 17,500 அடி உயரத்தில் மூன்று சீன குடிமக்கள் தங்கள் வழியை தவற விட்டு தவித்தனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்திய படைவீரர்கள், அவர்களை காப்பாற்றினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லையில், நமது நாட்டின் இறையாண்மையையும், எல்லையையும் காக்க இராணுவத்தினர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். 
இந்திய ராணுவம் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில், ஆக்கிரமிக்க நினைத்த சீன ராணுவத்திற்கு, தக்க பதிலடி கொடுத்து, ராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 


ஆனால், அதே சமயத்தில் வடக்கு சிக்கிமில் உள்ள ஒரு பகுதியில், பூஜ்யம் டிகிரி தட்ப நிலை உள்ள பகுதியில், சிக்க தவித்த சீனர்களை காப்பாற்ற நமது நாட்டின் வீரர்கள் தயங்கவில்லை. செப்டம்பர் 3 ம் தேதி வடக்கு சிக்கிமில் 'ஜீரோ டிகிரி' தட்பநிலையில், வழி தவறி சிக்கி தவித்த ஒரு பெண் உட்பட மூன்று சீன குடிமக்களை, நமது பெருமை மிகு ராணுவ வீரர்கள் காப்பாற்றினர்.


இந்த மூன்று சீன குடிமக்கள் வடக்கு சிக்கிமின் சுமார் 17,500 அடி உயரத்தில் உள்ள பகுதியில், வழியை தவற விட்டு எங்கே போவது என தெரியாமல் தவித்தனர். பின்னர் இந்திய வீரட்ர்கள் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்.


இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட  வழிதவறிய சீன குடிமக்களின்  உணவு இல்லாமல் அந்த கடுங்குளிரில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களுக்கு ஆக்ஸிஜன், உணவு மற்றும் சூடான உடைகள் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வழங்கினர்.


மேலும் படிக்க | சீண்டினால் சிதறிப்போவீர்கள்... ராஜ்நாத் சிங் சீனாவிற்கு எச்சரிக்கை..!!!


இது மட்டுமல்லாமல், இந்திய வீரர்கள் சீன குடிக்கள் போக வேண்டிய இடத்தை  அடைய சரியான வழியில் செல்வது குறித்த தகவல்களையுள் அளித்தனர். சீன குடிமக்கள், தங்கள் உயிரை காப்பாற்றியதற்காக, இந்தியாவுக்கும் இந்திய ராணுவத்துக்கும் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | "அமைதி ஏற்பட நம்பிக்கை தேவை": சீன பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் ராஜ்நாத் சிங்