பன்றிக் காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக தலைவர் அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நெஞ்சு வலி, மற்றும் சுவாசக் கோளாறு தொடர்பான பிரச்சினைகளுக்காக கடந்த 16-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சென்றார். அப்போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, அன்று இரவு 9 மணி அளவில் வார்டில் அமித் ஷா சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். 


கடந்த 3 நாட்களாகத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நலம் சீரான நிலையில் இன்று அமித் ஷா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.