புதுடெல்லி: ஹரியானாவில் பாஜக (BJP) ஜனநாயக் ஜனதா கட்சியுடன் (Jannayak Janata Party -JJP) சேர்ந்து மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்க வாய்ப்பு எனத் தகவல். உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசியத் தலைவரான அமித் ஷாவைச் சந்திக்க, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா (Dushyant Chautala) உள்துறை அமைச்சரின் இல்லத்திற்கு சென்றுள்ளனர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினருக்கும் இடையிலான கூட்டணிக் குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு தாமதமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் கூட்டத்தில் பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவும் கலந்துகொள்கிறார் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனநாயக் ஜனதா கட்சி சில கோரிக்கைகளை பாஜகவுக்கு முன்னால் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது துணை முதல்வர் மற்றும் இரண்டு மந்திரி பதவிகளின் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் உடன்பாடு செய்யும் முடிவில் ஜேஜேபி கட்சியின் துஷ்யந்த் சவுதாலா இருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன. துஷ்யந்த் சவுதாலாவின் இந்த கோரிக்கையை பாஜக ஏற்றுக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இதுக்குறித்து இரு கட்சிகளிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிக்கை கிடைத்த பின்னரே, அது தெளிவான முடிவு கிடைக்கும்.


முன்னதாக இன்று மாலை, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளிடம் இருந்து ஆட்சி அமைக்க ஆதரவு தருமாறு கேட்டதாக ஜே.ஜே.பி தலைவர் துஷ்யந்த் சவுதாலா தெரிவித்திருந்தார்.