காங்கிரஸ் ஜோடித்த பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரயாக் தாக்குர்-க்கு தேர்தலில் போட்டியிட பாரதீய ஜனதா வாய்ப்பு அளித்ததில் தவறு இல்லை என அமித் ஷா தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில் பாரதீய ஜனதாவின் ஊடக மையத்தை அக்கட்சியின் தலைவர் அமித்‌ஷா வாரணாசியின் மெகமூர்கஞ்ச் பகுதியில் தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடன் பேசிய அவர்,. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலை விட இந்த மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும். இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நடைப்பெற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள ஓட்டுப்பதிவை வைத்து பார்க்கும் போது மத்தியில் பாரதீய ஜனதா தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.


குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியை விட பாரதீய ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.


வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிட இருப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து கேட்டபோது., ஜனநாயகத்தில் யார் வேண்டுமானலும் எந்த தொகுதியிலும் போட்டியிடலாம். வாரணாசியில் எங்கள் வேட்பாளராக பிரதமர் மோடியை அறிவித்து இருக்கிறோம். 


ஏப்ரல் 25-ஆம் நாள் அவர் வாரணாசியில் வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொள்கிறார், தொடர்ந்து அடுத்தநாள் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் என தெரிவித்தார்.


காங்கிரஸ் கட்சி குறித்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சி நாட்டின் பாதுகாப்பில் அக்கறை காட்டாமல் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது. வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டே, காங்கிரஸ் ஆட்சியின் போது சிறையில் இருந்த ல‌‌ஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் அப்பாவிகள் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேகான் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், காங்கிரஸ் ஜோடித்த பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் பிரயாக் தாக்குர். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட பாரதீய ஜனதா வாய்ப்பு அளித்ததில் தவறு இல்லை எனவும் தெரிவித்தார்.