டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக தலைவர்களே காரணம்: அமித்ஷா
டெல்லி தோல்விக்கு பாஜக தலைவர்களின் தவறான பிரச்சாரம் தான் காரணம் என அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்
டெல்லி தோல்விக்கு பாஜக தலைவர்களின் தவறான பிரச்சாரம் தான் காரணம் என அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 11 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 16 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இந்நிலையில் டெல்லி தோல்விக்கு பாஜக தலைவர்களின் தவறான பிரச்சாரம் தான் காரணம் என அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். டெல்லி தேர்தலை பொறுத்தவரை என்னுடைய வியூகம் தவறாக மாறிவிட்டது என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் பாஜக தலைவர்கள் தவறான முறையில் பிரச்சாரம் செய்தார்கள்.
அதே நேரத்தில் டெல்லி மக்கள் பாஜகவை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விடவில்லை என்றும் ஒரு சில தொகுதிகளில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தது என்றும் கூறினார்.