Amit Shah In Rajya Sabha On Wayanad Landslides: கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் இன்று பேசினார். அதில், கேரள அரசுக்கு ஜூலை 23ஆம் தேதி அன்றே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயநாட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அமித் ஷா இரங்கல் தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தில் நிச்சயம் அரசியல் இருக்கக் கூடாது என்றும் கூறினார். மாநிலங்களவையில் மேலும் பேசிய அவர்,"கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து முன்னெச்சரிக்கை அமைப்பை வலுபடுத்துவதற்கு மத்திய அரசு சுமார் ரூ.2000 கோடி அளவிற்கு செலவிட்டுள்ளது.


மீண்டும் மீண்டும் எச்சரித்தோம்...


கடந்த ஜூலை 23ஆம் தேதி அன்று கேரளா அரசுக்கு மத்திய அரசு முன்னெச்சிரிக்கையை வழங்கியது என்பதை தெரிவித்துகொள்ள விரும்புகிறேன். சம்பவம் நடப்பதற்கு 7 நாள்களுக்கு முன்னரே முதல் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜூலை 24 மற்றும் ஜூலை 25ஆம் தேதிகளிலும் மீண்டும் எச்சரிக்கை விடுத்தோம். ஜூலை 26ஆம் தேதி அன்று 20 செ.மீ., மேல் அதிக மழைப் பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், அதில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தோம்" என்றார்.



மேலும் படிக்க | வயநாடு நிலச்சரிவு: மிக தீவிர மழை பெய்ய என்ன காரணம்? - தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன விஷயம்!


மேலும் தொடர்ந்த அவர்,"இந்த முன்னெச்சரிக்கை அமைப்பை பயன்படுத்தி, நிலச்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை கருதி, ஜூலை 23ஆம் தேதியே எனது உத்தரவின் பேரில் 9 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கேரளாவுக்கு விரைந்தனர். கேரள அரசு என்ன செய்தது?, மக்கள் அந்த இடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்களா?, அப்படி சென்றிருந்தால் அவர்கள் எப்படி உயிரிழந்தார்" என அடுக்கடுக்காக கேரள அரசை எதிர்த்து கேள்வி எழுப்பினார். இருப்பினும், இந்த நேரத்தில் யார் மீதும் பழிப்போடக்கூடாது என்றும் இந்த நேரத்தில் கேரள மக்களுடன் துணை நிற்க வேண்டும் என்ரும் அவர் பேசினார்.


மீட்புப் பணிகள் தீவிரம் - பினராயி விஜயன்


கேரளாவின் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா ஆகிய கிராமங்களை சுற்றி நான்கு மணிநேர இடைவெளியில் மொத்தம் மூன்று முறை நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதிக கனமழை பெய்த காரணத்தினால் அங்கிருந்த சாலியார் ஆற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பபட்டுள்ளது. நிலச்சரிவிலும், ஆற்று வெள்ளத்திலும் பலரும் அடித்துச்செல்லப்பட்டார்கள். கட்டடங்கள், சாலைகள், மரங்கள், வாகனங்கள் மொத்தமும் அடித்துச் செல்லப்பட்டு கடுமையான சேதத்தை சந்தித்தன. 


தற்போது வரை 180க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், வயநாட்டில் மட்டும் 191 பேரை காணவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தெரிவித்தார். மேலும், இதுவரை 144 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் பினராயி விஜயன் கூறினார். 


பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,"மேப்பாடி பாலிடெக்னிக் கல்லூரி தற்காலிக மருத்துவமனையாக செயல்பட்டு வருகின்றது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கையில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது சற்று கடினமாகி உள்ளது. மிகவும் கடினமான இடங்களுக்குச் செல்ல கடற்படையிடம் உதவிக் கோரப்பட்டுள்ளது. மீட்கப்படும் உடல்கள் விரைவாக உடற்கூராய்வு செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. நிலச்சரிவால் காயமடைந்த 90 பேர் மருத்துவமனையில் இருக்கின்றனர்" என்றார். 


மேலும் படிக்க | வயநாட்டின் நிலைமை ஊட்டிக்கும் வரலாம்... எச்சரிக்கும் வல்லுநர்கள் - ஆக்‌ஷன் எடுக்குமா அரசு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ