தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா சார்பில் நாளை விருந்து!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய மக்களவைக்காக 543 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நிறைவு பெற்றுள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை நடைபெற்ற தேர்தல், மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றோடு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மத்தியில் ஆளும் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.


எனினும் தமிழத்தை பொருத்தவரையில் தான் கூட்டணி அமைத்துள்ள அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழகத்தில் 6 இடங்கள் வரையே கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா சார்பில் நாளை விருந்து அளிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


டெல்லியில் நாளை பாஜக தலைவர் அமித் ஷா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்க உள்ளதாக அழைப்பு அனுப்பபட்டுலாதகவும்,  மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் பாஜக தலிவர் அமித் ஷா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.