இன்று தமிழகம் முழுவதும் உழவர் திருநாளாம் அறுவடைத்திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் உலக முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் பொங்கல் கொண்டாடும் தமிழக மக்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 


"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு எனது மகிழ்ச்சியான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். இந்த வருட பொங்கல் திருவிழா அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.