Ammonia வாயுவால் ஸ்தம்பித்துப் போன கேரள மாணவர்கள்!
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அமோனிய வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்!
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அமோனிய வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்!
பள்ளிக்கு அருகாமையில் அமோனிய வாயு நிரப்பப்பட்டு நிருத்திவைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரி ஒன்றில் வாயு கசிய ஆரம்பித்ததால், அப்பகுதி மக்கள் சுவாச பிரச்சனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தகவலறித்து வந்த காவல்துறையினர் டேங்கர் லாரியினை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.
Fertilisers And Chemicals Travancore (FACT), நிறுவனத்திலிருந்து மாற்றத்திற்காக கொண்டுச் செல்ல இந்த வாகனம் பயணித்ததாகவும், பயணிக்கையில் இந்த கசிவு நடந்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் எனவும் அங்கு வந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிற்பகள் சுமார் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் இது ஒரு பெரிய கசிவு அல்ல எனவும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கசிந்த வாயுவினை சுவாசத்த சிலருக்கு சுவாச பிரச்சனை, கண்களில் எரிச்சல் மற்றும் குமட்டல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கொச்சி துறைமுக அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட சுகாதார பரிசோதனையில் அனைவரும் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.