அமிர்தசரஸ் குண்டுவெடிப்பு: சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யபட்டார்...
அமிர்தசரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஒருவரை தீவிரமாக தேடி வருவதாக அமானில முதலவர் தெரிவித்துள்ளார்!
அமிர்தசரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஒருவரை தீவிரமாக தேடி வருவதாக அமானில முதலவர் தெரிவித்துள்ளார்!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டதிற்கு உட்பட்ட ராஜஸ்சான்ஸி கிராமத்தில் உள்ள நிரன்கரி பவனில் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி மதியம் ஏற்பட்ட குண்டுவெடிப்பு விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நிரன்கரி பவன் என்பது அக்கிராமத்தில் உள்ள மத போதனை, பிரார்த்தனை மண்டபம் ஆகும்.
பிரார்த்தனை கூடத்திற்கு மோட்டார் பைக்குகளில் வந்த வந்த 3 மர்ம நபர்கள் குண்டெறிந்து சென்றதாகவும், முகத்தினை அவர்கள் துணியால் மறைத்திருந்ததால் அடையாளம் காண இயலவில்லை எனவும் சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, அமிர்தசரஸ் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றித் துப்புக் கொடுப்போருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் எனப் பஞ்சாப் முதலமைச்சர் மரீந்தர் சிங் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் பேசுகையில், இந்த வெடிகுண்டு தாக்குதலில் வகுப்புவாத மோதல்கள் ஏதும் இல்லை. இது முழுக்க முழுக்க தீவிரவாத தாக்குதல்தான். பாகிஸ்தானின் ISI உளவு அமைப்புதான் இந்த வேலைகளை செய்திருக்கும். எளிதாக தாக்க முடியும் என்பதால் அப்பாவிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. மேலும், கையெறி குண்டு வீசப்பட்டதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. ஐஎஸ்ஐ அமைப்பு மூளையாக செயல்பட்டுள்ளது. வீசப்பட்ட குண்டு, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை குண்டுகளை தான் காஷ்மீரிலும் ராணுவத்தினர் மீது வீசப்படுகிறது. முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். 2வது குற்றவாளியின் அடையாளத்தை கண்டுபிடித்துள்ளோம். விரைவில் அவனும் கைது செய்யப்படுவான் எனக் கூறினார்.
முன்னதாக, காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பாக சீக்கிய அமைப்புகளை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.