பஞ்சாப் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் ஒன்றின் கழிப்பறையில் கிடந்த ஆண்குழந்தையை காவல்துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சனிக்கிழமை பிற்பகல் அமிர்தசார்-ஹொரா எக்ஸ்பிரஸ் ரெயில் அமிர்தசரஸ் ரயில்நிலையத்தை வந்தடைந்துள்ளது. இதையடுத்து, அந்த ரயிலை சுத்திகரிக்கும் பணியில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, துப்புரவு பணியாளர்கள் அமிர்தசார்-ஹொரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த ஒரு பெட்டியில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்து கொண்டிருக்கையில், கழிப்பறையின் உள்ளே கலுற்றில் துணி சுற்றபடிருந்த நிலையில் ஒரு ஆண் குழந்தையை கிடந்துள்ளது. 


இதை தொடர்ந்து, அந்த குழந்தையை துப்புரவு பணியாளர்கள் மீட்டு ரயில்வே காவல் துறையிரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, அந்த குழந்தையை ரயில்வே காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து மருத்துவர் கூறுகையில், இந்த குழந்தை பிறந்து சுமார் ஒரு நாட்கள் மட்டுமே இருக்கும் என்றும், தற்போது குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டு வருவதாகவும் கூறினார். குழந்தைக்கு "அதிர்ஷ்டவசமாக, குளிர்காலத்தில் குளிரும் கழிப்பறைக்குள்" தள்ளப்பட்ட போதிலும், பிழைத்திருப்பது அதிர்ஷ்டம்.


மேலும், இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் நகரமான அமிர்தசர் பகுதியில் உள்ள அரசு ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள CCTV காட்சிகளையும் பரிசொத்திக்குமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.