புதுடெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஃபேல் விமானத்தின் முதல் பிரிவு புதன்கிழமை இந்தியாவின் அம்பாலா ஏர்பேஸுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் முன்னணி பால் விற்பனை நிறுவனமான Amul, போர் விமானங்களை வரவேற்கும் விதமாக புதிய தலைப்பை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுலின் தலைப்புச் சித்திரத்தில், அமுலின் சின்னமாக பல காலமாக நம் மனதில் பதிந்திருக்கும் சிறுமி, இந்திய விமானப்படையின் (IAF) பைலட்டாக உடையணிந்து ஒரு ரஃபேல் ஜெட் விமானத்தின் முன் நிற்பது போல் காட்டப்பட்டுள்ளது.


ட்விட்டரில் இந்த தலைப்புச் சித்திரம் “#Amul Topical: First batch of Rafale Jets arrive…” என்ற தலைப்புடன் பகிரப்பட்டது. அமுல், புகழ் அல்லது பிரபலமான சொற்றொடர்களைப் பயன்படுத்தி சிலேடைப் பேச்சுக்களை உருவாக்குவதில் புகழ் பெற்றது. இம்முறையும், படம் “Jab We Met” என்ற சொற்றொடருடன் பகிரப்பட்டது.



“Jab We Met” என்றால் நாம் சந்தித்த போது என்று பொருள். இந்தியாவும் ரஃபேல் விமானங்களும் சந்திக்கும் வேளையை பெருமை படுத்தும் விதமாக அமுல் இந்த சொற்றொடரை பயன்படுத்தியுள்ளது.


இதற்கிடையில், ஐந்து ரஃபேல் போர் விமானங்களின் முதல் பிரிவு புதன்கிழமை (ஜூலை 29) அம்பாலா விமான நிலையத்திற்கு வந்து சேர்கிறது. இது இந்திய விமானப்படையின் 18 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் இருக்கும். IAF தலைவர் ஆர்.கே.எஸ் பதௌரியா (RKS Bhadauria) அம்பாலா விமான நிலையத்தில் ரஃபேல் ஜெட் விமானங்களைப் பெற்றுக்கொள்வார். இது பிரான்சிலிருந்து இந்தியா வாங்கிய 36 சூப்பர்சோனிக் ஓம்னிரோல் போர் விமானத்தின் முதல் பிரிவாகும். 


ALSO READ: ரஃபேல் போர் விமானங்கள் ஏன் அம்பாலாவுக்கு கொண்டு வரப்படும் ரகசியம் என்ன?