நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உழவர் உற்பத்தி, வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாதம் மற்றும் வேளான் சேவைகள் மசோதா, 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா 2020 ஆகிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் (Farm Bill) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதை அடுத்து இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், மிகப் பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான அமுல் (Amul) நிறுவமத்தின் நிர்வாக இயக்குநர், இந்த புதிய வேளாண் சட்டங்களை வரவேற்றுள்ளார். 


அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையிலான பால் சந்தை , பால் உற்பத்தி நிறுவனம் வளர பெரிதும் உதவியது எனக் குறிப்பிட்டார். பால் துறையில், அன்னிய நேரடி முதலீட்டிற்கு 100 சதவித அனுமதி உள்ளது என்றும், நெஸ்ட்லே, யூனிலிவர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ள போதிலும், அமுல் நிறுவனம் முன்னணி நிறுவனமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.  


மேலும் படிக்க | வேளான் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் Ram Nath Kovind ஒப்புதல்!!


வேளான் மசோதாக்கள் குறித்து பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சியில், கூறியது தொடர்பாக் கருத்து தெரிவித்த, அமுல் நிர்வாக தலைவர். திரு,ஆர்.எஸ்.சோதி, பண்ணை உற்பத்தியாக பால் உற்பத்தி, ரூ .8 லட்சம் கோடி மதிப்பில் உள்ளது என்றும், இது கோதுமை, நெல் மற்றும் கரும்பு ஆகியவற்றின் மொத்த உற்பத்தி மதிப்பை விட அதிகம் எனக் கூறினார். 


அமுல் நிறுவனத்துடன் தொடர்புடைய, அல்லது அமுல் நிறுவனத்துடன் தொடர்பில்லாத, என அனைத்து பால்  உறப்த்தியாளர்களும் தங்கள் தயாரிப்புகளை எங்கும் விற்கலாம் என்றும், வாங்குபவர்கள் அதை எங்கிருந்தும் வாங்கலாம் என்றும் அவர் கூறினார். பால் உற்பத்திக்கான போட்டி கிராம மட்டத்தில் கூட உள்ளது.


அதே போல் விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களை, எங்கும் விற்கலாம், தங்கள் விலையை தாங்களே நிர்ணையித்துக் கொள்ளலாம் என்பது போன்ற விவசாயிகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் விதிகள், விவசாய உற்பத்தி தொடர்பான ஒப்பந்த விதிகள்,  ஆகியவை விவசாயிகளுக்கு பெரிதும் நலன் கொடுப்பவை என்றார்.


மேலும் படிக்க | படிக்கல... பரீட்சை எழுத்தல... ஒரே இரவில் அரசு ஊழியரான ஏழை விவசாயி...!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR