ஏ.என்.-32 விமானம்: அமெரிக்காவிடம் உதவி கோருகிறது இந்தியா
சென்னை - தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் ஜூலை 22ம் தேதி அந்தமான் நோக்கிச் சென்ற ஏஎம் - 32 ரக விமானப்படை விமானம் மாயமானது. அதனை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. காணாமல் போன விமானத்தை தேட அமெரிக்க பாதுகாப்பு படையின் உதவியை நாடப் போவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், விமானம் மாயமாவதற்கு முன் ஏதாவது சிக்னல் அமெரிக்க செயற்கைகோளுக்கு கிடைத்ததாக என்பதை அறிவதற்காக அமெரிக்காவின் உதவியை நாட உள்ளதாக கூறினார். இருப்பினும் விமானம் மாயமானதற்கு நாச வேலை காரணமாக இருப்பதற்கு வாய்ப்புக்கு மிக குறைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விமானத்தை தேடுவதற்காக இன்று மேலும் 2 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.