நிகோபார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.0 ஆக பதிவு!
அந்தமானின் நிகோபார் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமானின் நிகோபார் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடலில் இருந்து 84 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை 8.43 மணிக்கு நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால், பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது நிகோபார் தீவின் 25 கிமீ சுற்றளவு வரை உணரப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சுனாமி ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் உண்டானதா என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.