அக்னி வீரர்களுக்கு வேலை : அக்னிபாத் திட்டத்தை வரவேற்கும் ஆனந்த் மஹிந்திரா
Anand Mahindra : அக்னிபாத் வீரர்களுக்கு மகிந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பளிக்கப்படுமென அதன் நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.
முப்படைகளுக்கும் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் என்றத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் ஏராளமான இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் ரயில்களுக்குத் தீ வைக்கப்பட்டன.
எனினும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. முதற்கட்டமாக இந்திய ராணுவம் அக்னிபாத் திட்டத்திற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. இந்திய நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அக்னிபாத் திட்டத்தை முன்வைத்து நடைபெற்ற வன்முறையைக் கண்டு வருத்தமுற்றேன். கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டபோது கூறியதையே நான் மீண்டும் கூறுகிறேன். அக்னி வீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களை பணியில் சிறந்தவர்களாக மாற்றும். அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | அக்னிபாத் : கடும் எதிர்ப்புக்கு இடையே ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்ட ராணுவம்
இதனைத் தொடர்ந்து, அக்னி வீரர்களுக்கு மகிந்திரா நிறுவனத்தில் எவ்விதமான பணிகள் வழங்கப்படும் என ட்விட்டரில் ஒருவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, கார்ப்பரேட் துறையில் அக்னிவீரர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், நிர்வாகம் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை வரை அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறினார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR