அக்னிபாத் : கடும் எதிர்ப்புக்கு இடையே ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்ட ராணுவம்

Aginipath Recruitment : இளைஞர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே அக்னிபாத் திட்டத்திற்கான அறிவிப்பாணையை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Jun 20, 2022, 05:08 PM IST
  • அக்னிபாத் திட்டத்திற்கான அறிவிப்பாணையை வெளியிட்ட ராணுவம்
  • அடுத்த மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்
  • முப்படைகளில் முதன்முதலாக அறிவிப்பு வெளியிட்ட ராணுவம்
அக்னிபாத் : கடும் எதிர்ப்புக்கு இடையே ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்ட ராணுவம் title=

மத்திய அரசு அக்னிபாத் என்ற திட்டத்தை அமல்படுத்தவுள்ளது. அதாவது, இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் நான்கு ஆண்டுகள் மட்டும் ராணுவத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஓய்வூதியம் இல்லாதது, 4 வருடங்கள் மட்டும் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு அதற்கு பிறகு என்ன செய்வது போன்ற கேள்விகளுடன் இளைஞர்கள் கொதிப்பில் உள்ளனர்.

மேலும் இத்திட்டத்தை திரும்பபெற வேண்டுமென நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக வட மாநிலங்களில் ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டு, ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டன. மேலும், பாஜக தலைவர்களின் வீடுகளும், அலுவலகங்களும் தாக்கப்பட்டன. இந்த எதிர்ப்புக்கு இடையிலும் அக்னிபாத் திட்டத்திற்கான முதல் அறிவிப்பாணையை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.  

மேலும் படிக்க | அக்னிபாத் திட்டம்... தொடங்கியது பாரத் பந்த் - முடங்கின வடமாநிலங்கள்

முப்படைகளிலும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  இந்திய ராணுவம் முதன்முதலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கவுள்ளது. 

மேலும், ராணுவத்தின் மருத்துவப்பிரிவில் தொழில்நுட்பப் பணியாளர் பணியைத் தவிர்த்து பிற பணிகளில் நுழைய அக்னிபாத் திட்டத்தின் கீழ் மட்டுமே நுழைய முடியுமென அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள இளைஞர்கள் joinindianarmy.nic.in என்ற இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

கப்பற்படையின் அறிவிப்பு நாளையும், விமானப்படையின் அறிவிப்பு வரும் 24-ம் தேதியும் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | அக்னிபாத் திட்டம் ராணுவத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் - பிரியங்கா காந்தி எச்சரிக்கை!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News