அட்லி மனைவி பிரியா பிளவுஸில் எழுதியிருந்தது என்ன? மணமகன் வரவேற்பில் ஜொலித்த இந்த 3 நடிகைகள்!
Anant Ambani Baraat Ceremony: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமண விழா இன்று தொடங்கிய நிலையில், அதற்கு வருகை தந்த நட்சத்திரங்களில் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்த பிரபல நடிகைகளின் காஸ்ட்யூம்களை இங்கு காணலாம்.
Anant Ambani Baraat Ceremony Latest Updates: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரது திருமணம் இன்று தொடங்கி அடுத்த மூன்று நாள்களுக்கு நடைபெற இருக்கும் நிலையில், அம்பானியின் அண்டிலியா இல்லத்தில் இருந்து இன்று மாலை 5 மணியளவில் மணமகன் அழைப்பு நமது ஊரில் அழைக்கப்படும் மணமகனை குதிரையில் வைத்து அழைத்து வரும் நிகழ்வு தொடங்கியது.
இந்த நிகழ்வில்தான் பல்வேறு நடிகைகள் பங்கேற்றனர். திருமணத்திற்கு முன் நடைபெறும் மணமகன் அழைப்பு நிகழ்வுக்கு, பிரபலங்கள், பாலிவுட் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் சிறந்த மற்றும் தனித்துவமான ஆடையை அணிந்து வந்திருந்தனர்.
நடனமாடிய ரஜினிகாந்த்...
நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா, இளைய மகன் சௌந்தர்யா, சௌந்தர்யாவின் விஷாகன் வணங்காமுடி, அவர்களின் மகன் வீர் ஆகியோர் குடும்பத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதில் ரஜினிகாந்த் மற்றும் விஷாகன் ஆகியோர் வேட்டி சட்டையில் வந்திருந்தனர். லதா மற்றும் சௌந்தர்யா பாரம்பரியமிக்க சேலைகளை அணிந்து வந்தனர். ரஜினிகாந்த் இந்நிகழ்வில் மணமகனுடன் நடனமாடுடன் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
ஆனந்த் அம்பானியின் படை
அதில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஒரே வகை லெஹங்காவைதான் பிரபல பாலிவுட் நடிகைகளான அனன்யா பாண்டே, ஷனாயா கபூர், குஷி கபூர் ஆகியோர் உடுத்தியிருந்தனர். இந்த மூன்று உடைகளின் பிளவுஸ்களிலும் 'Anant's Brigade' ஆனந்தின் படை என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டிருந்தது. அதாவது, அவர்கள் ஆனந்த் அம்பானியின் தரப்பு விருந்தினர்கள் என்ற ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இவர்கள் உடையின் பின்புறம் மட்டும் இல்லாமல் பல்வேறு பிரபலங்களின் ஆடைகளிலும் இருந்தன.
(புகைப்படம்: அனன்யா பாண்டே)
மேலும் படிக்க | ஆனந்த் அம்பானி weds ராதிகா மெர்ச்சன்ட்... காதல் முதல் கல்யாணம் வரை... அனைத்தும் இதோ!
கவர்ந்திழுத்த நடிகைகள்
அனன்யா பாண்டே, இடை தெரியும் வகையில் அணிந்திருந்த மஞ்சள் நிற லெஹங்கா மற்றும் தனித்துவமான ஹேர்ஸ்டைல் மற்றும் சிறிய பொட்டு அவரை ஒரு அழகிய பொம்மைப் போல் காட்டின. அவர் எவ்வித அணிகலனும் அணியாமலேயே அனைவரின் பார்வையிலும் ஜொலித்தார் எனலாம்.
(புகைப்படம்: ஷனாயா கபூர்)
அடுத்து, மணமகன் வரவேற்புக்கு வந்திருந்த ஷனாயா கபூர் நீல நிற லெஹங்காவில் போனிடெயில் ஹேர்ஸ்டைல் உடன் இளஞ்சிறப்பு நிறம் மேக்அப் உடன் பொலிவாக தோற்றமளித்தார். அதேபோல்தான், நடிகை குஷி கபூரும் பச்சை நிற லெஹங்காவில் பளீரென தோற்றமளித்தார். வைர நெக்லைஸையும் அணிந்திருந்தார்.
(புகைப்படம்: குஷி கபூர்)
இயக்குநர் அட்லியும், அட்லியின் மனைவியும் நடிகையுமான பிரியா ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதில் பிரியா அட்லி அணிந்து வந்த ஆடையிலும் 'Anant's Brigade' என குறிப்பிடப்பட்டிருந்தது.
(புகைப்படம்: இயக்குநர் அட்லி, நடிகை பிரியா)
பங்கேற்ற பிரபலங்கள்
மேலும், பிரபலங்கள் சாரா அலி கான் மற்றும் அவரது சகோதரர் இப்ராஹிம், ஜான்வி கபூர் மற்றும் ஷிகர் பஹாரியா, ஜெனிலியா மற்றும் ரித்தீஷ் தேஷ்முக், ஷாருக்கான், ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் மகன் ஆர்யன் கான், ரன்வீர் கபூர், பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர், WWE புகழ் ஜான் ஷீனா, சல்மான் கான், கிருத்தி சனான், சல்மான் கான், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, இஷான் கிஷன், எம்எஸ் தோனி மற்றும் அவரது குடும்பத்தினர், மாதுரி தீக்ஷித் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சூஃபி பாடகர் கவிதா சேத் இசை நிகழ்வும் நடைபெற்றது. மணமகன் ஆனந்த் அம்பானி குதிரையின் மேல் அமரவைக்கப்பட்டு ஊர்வலமாக திருமணத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ