Anant Ambani Radhika Merchant Wedding: இந்தியா மட்டுமின்றி இன்று உலகம் முழுவதும் பலரையும் கவனம் ஈர்த்துள்ள நிகழ்வு என்றால் அது ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் எனலாம். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் (Mukesh) இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்ட முறையில் அதிக பொருட்செலவிலும் நடத்தப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணம் நடைபெறுவதற்கு முன்னரே இந்தியாவில் ஒன்று, இந்தியாவுக்கு வெளியே ஒன்று என இரண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தினமும் திருமணத்தை முன்னிட்ட கொண்டாட்டங்களும், பூஜைகளும், சடங்களும் நடைபெற்று வருகின்றன. அதிலும் நிதா அம்பானி (Nita Ambani), இஷா அம்பானி (Isha Ambani), ஸ்லோகா மேத்தா (Shloka Metha), அஞ்சலி மெர்ச்சன்ட் (Anjali Merchant)


ஆனந்த் - ராதிகா காதல் கதை!


மும்பையின் முக்கிய குடும்பத்தைச் சேர்ந்த ராதிகா மெர்ச்சன்ட் (Radhika Merchant), மருத்துவத்துறையில் பணியாற்றுகிறார். Encore Healthcare நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்ற இவர், இந்திய பாரம்பரிய நடனத்திலும் பரிட்சயம் பெற்றவர். இவரும், ஆனந்த் அம்பானியும் 2017ஆம் ஆண்டு நண்பர்கள் மூலம் சந்தித்துக்கொண்டனர். இவர்களுக்கு இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது.


மேலும் படிக்க | அம்பானிகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 சீக்ரெட்ஸ்...! வாழ்க்கை சும்மா அம்சமா இருக்கும்


2023ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ஆனந்த் அம்பானி (Anant Ambani) தனது காதலை ராதிகாவிடம் வெளிப்படுத்தினார். அதை தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் செய்தி பொதுவெளியிலும் அறிவிக்கப்பட்டது. இவர்களின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வு ஒன்று மார்ச் மாதம் அன்று குஜராத் மாநிலம் ஜாம் நகரிலும், மற்றொன்று மே மாதத்தில் இத்தாலி - பிரான்ஸ் வரை மூன்று நாள்களுக்கு சொகுசு கப்பலிலும் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் ரிஹான்னா, ஜஸ்டின் பெய்பர், கேட்டி பெர்ரீ உள்ளிட்டோரும் பெர்ஃபார்ம் செய்தனர். 


மூன்று நாள்கள் 


இதை தொடர்ந்து, ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மீதான எதிர்பார்ப்பும் அப்போதே அதிகமானது. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா மூன்று நாள்கள் நடைபெற உள்ளன. குறிப்பாக, இன்று சுப விவாஹம் எனும் அக்னி சாட்சியாக நடைபெறும் திருமண விழா நடைபெற உள்ளது. மேலும், சுப ஆசிர்வாத் நிகழ்வு நாளையும் (ஜூலை 13), மங்கல் உத்சவ் நாளை மறுதினமும் (ஜூலை 14) நடைபெறுகிறது. இந்த மூன்று நாள்கள் நடைபெறும் ஒட்டுமொத்த திருமண விழாவும் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஜியோ வோல்ர்ட் கன்வென்ஷன் சென்டரில் (Jio World Convention Centre) நடைபெறுகிறது. 


இந்த திருமண விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், கலைஞர்கள், தொழிலதிபர்கள், பெருநிறுவனங்களின் சிஇஓக்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர். இதனால், மும்பை நகரமே இத்தனை உலகப் பிரபலங்களில் வருகையால் விழாக்கோலம் பூண்டுள்ளது எனலாம். 


தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பு


உலகத் தலைவர்கள் என பார்த்தால் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேயர் மற்றும் போரிஸ் ஜான்சன், ஸ்வீடன் நாட்டின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட், கனடா நாட்டின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹோர்பர், முன்னாள் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்திய தலைவர்கள் என பார்க்கும் போது மத்திய அமைச்சர்கள், பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மும்பை வந்தார் ஜான் சீனா


பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பர் சங்கீத் நிகழ்வில் பங்கேற்ற நிலையில், அவர் திருமண விழாவிலும் பாட இருக்கிறார். தொடர்ந்து, அடீல், டிரேக், லானா டெல் ரே உள்ளிட்ட முக்கிய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளும், சோனு நிகம் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகிய இந்திய பாடகர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெறும் என தெரிகிறது. குறிப்பாக, அமெரிக்க பிரபலங்களான கிம் கர்தாஷியம் மற்றும் க்ளோ கர்தாஷியன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். WWE மூலம் பிரபலமடைந்த ஜான் சீனாவும் (John Cena) ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் பங்கேற்க மும்பை விமான நிலையம் வந்த வீடியோவும் வெளியாகி இருந்தது. 


 



அடுத்தடுத்து வரும் அப்டேட்கள்


இந்த நிகழ்வில் பங்கேற்கும் விருந்தினர்கள் அனைவரும் பாரம்பரியம் மிக்க இந்திய உடையை உடுத்தி வர அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வில் பங்கேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விருந்தினர்களுக்கு என சிறப்பு விமானங்கள், சிறப்பான தங்குமிடங்கள் என வெளிநாட்டில் இருந்து மும்பை வரும் அனைத்து பிரபலங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கி வரும் ஞாயிறு இரவு வரை பல அப்டேட்கள் வர இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | இஷா அம்பானி vs நிதா அம்பானி... பாரம்பரிய காஸ்ட்யூமில் போட்டிப்போடும் தாயும் மகளும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ