இஷா அம்பானி vs நிதா அம்பானி... பாரம்பரிய காஸ்ட்யூமில் போட்டிப்போடும் தாயும் மகளும்!

Anant Ambani Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று நடந்த சில வழிபாடுகளிலும், சடங்குகளிலும் நிதா அம்பானி மற்றும் இஷா அம்பானியின் ஆடைகள் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

  • Jul 12, 2024, 14:29 PM IST

நிதா அம்பானி மற்றும் இஷா அம்பானி ஆகிய இருவரும் தனித் தனியே பல ஆடை வடிவமைப்பாளர்களை வைத்துள்ளனர்.

 

 

1 /8

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா இன்று முதல் மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ளது. இந்த திருமண விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.   

2 /8

மும்பையில் உள்ள ஜியோ வோல்ர்ட் கன்வென்ஷன் சென்டரில் இந்த மூன்று நாள் திருமண விழா நடைபெறுகிறது. இந்த திருமண விழாவில் உலகம் முழுவதும் இருந்து அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப் பிரபலங்கள், கலைஞர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.   

3 /8

இன்று சுப விவாஹம் நிகழ்வு நடைபெறுகிறது. அதாவது அக்னியின் சாட்சியாக இன்று திருமணம் நடைபெறும். ஜூலை 13ஆம் தேதியான நாளை சுப ஆசிர்வாதம் மற்றும் ஜூலை 14ஆம் தேதியான நாளை மறுதினம் மங்கல் உத்சவ் ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகிறது.   

4 /8

திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளில் பங்கேற்ற விருந்தினர்கள், பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தனர். குறிப்பாக மணமகன் ஆனந்த் அம்பானியின் தாய் நிதா அம்பானியும், ஆனந்த் அம்பானியின் சகோதரி இஷா அம்பானியும் அவர்களின் தனித்துவமான உடைகளால் அதிகம் கவனம் ஈர்த்தனர்.   

5 /8

குறிப்பாக, திருமணத்திற்கு முந்தைய நாளான நேற்று அம்பானி குடும்பத்தினர் மாதா கி சௌகி எனும் வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் நிதா அம்பானி குஜராத்தி பாணியில் பாரம்பரியமான சிவப்பு நிற சேலையை உடுத்தியிருந்தார். அந்த உடையுடனான அவரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அவரின் ஹேர் ஸ்டைலிஸ்ட்டால் பகிரப்பட்டது.   

6 /8

குஜராத் பாரம்பரியத்தில் கர்சோலா என்றழைக்கப்படும் சேலையை அவர் உடுத்தியிருந்தார். இந்த உடையின் சிறப்பே கவர்ந்திழுக்கும் நிறமும், அழகிய வேலைப்பாடுகளும்தான். சேலையின் பிளவுசும் அழகிய கற்களின் வேலைப்பாடுகளுடன் இருந்து அந்த உடைக்கு ஒரு முழுமையை கொடுத்தது எனலாம்.   

7 /8

அதேபோல், அம்பானி குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த சிவ சக்தி பூஜை நிகழ்வில் இஷா அம்பானியின் ஆடை அனைவரையும் ஈர்த்தது. நிகழ்வில் மற்ற அனைவரை விடவும் இஷா அதிகமானரின் கவனத்தை இழுத்த ஆடை குறித்தும் காணலாம்.   

8 /8

பளபளப்பான மெரூன் நிற ஆடையை அவர் அணிந்திருந்தார். அவரின் லெஹங்காவில் பல கலாச்சார சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. மெரூன் நிற டீப் நெக் பிளவுஸ், ஸ்லீவ்ஸில் இளஞ்சிவப்பு லைனிங் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் அணிந்திருந்த அந்த ஸ்கெர்டில் கோயில்கள், பசுக்கள், கலைப்பொருட்கள் ஆகியவை பதிக்கப்பட்டிருந்தன.