ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்
மீண்டும் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள்
18:27 12-06-2019
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து அனந்தநாக்கில் உள்ள கே.பி. வீதியில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஐந்து வீரர்களில் மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இரண்டு வீரர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுடில்லி: ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தை அனந்தநாக்கில் உள்ள கே.பி. வீதியில் நடத்துள்ளது.
கே.பி சோக் பேருந்து நிலையம் உள்ள பகுதியில் பாதுகாப்பு அணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினார்கள். அப்பொழுது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடும் மற்றும் கையெறி குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த வீரர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மூன்று பேர் படுகாயம்.
இந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொள்ளப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக, இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபுர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.