புதுடில்லி: ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுதேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல்கள் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முக்கிய பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்... 


குறிப்படப்பட்ட இந்த நான்கு மாநிலங்களில் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் ஆளும் அரசின் ஆட்சிகாலம் முடிவுக்கு வருகின்றது. அதேப்போல் சமீபத்தில் ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும், அதன்படி மே, 2019-க்கு அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதால் இந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களுடன் சேர்த்து ஜம்மு - காஷ்மீர் தேர்தலும் நடத்தப்படலாம்.


ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைப்பெறும் சட்டமன்ற தேர்தல்கள் மக்களவைத் தேர்தல்களுடன் நடத்த தேர்தல் ஆணையம் விரும்பினால் கீழ்காணும் சாத்திரயகூறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்த வரும் மே, 2019 மாதம் வரை காலம் உள்ளது. ஒரு வேலை இம்மாதத்திற்கு முன்னதாகவும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படலாம் அது வரும் காலங்களில் தான் தெரியவரும்.


ஜூன் 27, 2019-ல் சிக்கிம் சட்டமன்றம் முடிவுக்கு வருகிறது, அதேப்போல் ஆந்திரா, ஒடிசா மற்றும் அருணாச்சல பிரதேச சட்டமன்றங்கள் முறையே ஜூன் 18, ஜூன் 11 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது.


"மக்களவைத் தேர்தல்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் போது, ​​சட்டசபைகளின் ஆட்சிகாலம் அதே காலப்பகுதியில் முடிவடைந்துவிட்டால், அனைத்து தேர்தல்களும் ஒன்றாக நடத்தப்படுவது இயல்பான ஒன்று, எனவும் அவர் குறிப்பிட்டார். 


இந்நிலையில் குறிப்பிடப்பட்ட நான்கு மாநிங்களின் தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்களுடன் நடத்த வாய்ப்புள்ளது. அதேவேலையில் ஜம்மு - காஷ்மீர் மாநில தேர்தலும் இந்த தேர்தல்களுடன் இணைய அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது.


Read in English