ஆந்திரப்பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி லோக்சபாவில், அமளியில் ஈடுபட்டதால் அவை துவங்கிய சில நிமிடங்களிலேயே மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


இதேபோன்று ராஜ்யசபாவிலும் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



மேலும், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 


தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.