ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் அருகே பாலகோல் பகுதிகளின் கல்லறை தோட்டத்தில் பேய்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக வதந்திகள் பரவி வந்தது. இதனால் அப்பகுதியில் வேலை செய்ய வந்த 50க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் பணிக்கு வர தாமதம் தெரிவித்தனர். இதன் காரணமாக கட்டிட வேலைகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை கேள்வி பட்ட தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த நிம்மலா ராமா நாயுடு என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் வெட்டவெளியில், கொசுக்கடியில் படுத்து உறங்கினார். 


இது குறித்து அவரிடம் நிம்மலா ராமா நாயுடுவிடம் கருத்து கேக்கும்போது,,! தொழிலாளர்களுக்கு பேய் மீது உள்ள அச்சத்தை போக்கவே இப்படி செய்ததாக கூறினார்.


நிம்மலா ராமா நாயுடுவின் இந்த செயலுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பலரும் ட்விட்டரில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.