ஒடிசாவையும் ஆந்திராவையும் புரட்டிப் போட்டுள்ள குலாப் புயல் வலுவிழந்து, மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்த போதிலும் , ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாகுளம் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குலாப் புயலின் (Cyclone Gulab) தாக்கத்தால் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பெய்த மழையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ .5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் நிலைமையை ஆய்வு செய்த முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கான் நிவாரணத் தொகையை அறிவித்தார். "பாதிக்கப்பட்டவர்களுக்கு  சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்," என்று அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டவர்களுக்கு தரமான உணவு, மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குமாறு அதிகாரிகளை ஜெகன் கேட்டுக் கொண்டார். "தேவைப்படும் இடங்களில் புனர்வாழ்வு மையங்களைத் திறக்கவும்" என்று அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 


விசாகப்பட்டினத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டார். 


நிலைமை சீரடைந்த பிறகு, மறுவாழ்வு மையங்களிலிருந்து தங்களது குடியிருப்புகளுக்கு செல்லும்போது, தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்று ஜெகன் விரும்பினார். தண்ணீர் மாசுபட வாய்ப்புள்ளதால் டேங்கர் மூலம் குடிநீர் வழங்கவும், ஜெனரேட்டர்கள் உதவியுடன் குடிநீர் வசதிக்கான ஏற்பாடுகளை செய்யவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.


ALSO READ | கரையைக் கடந்தது குலாப் புயல்; எவ்வளவு சேதம் தெரியுமா?


வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் இழப்பை விரைவில்  கணக்கிட வேண்டும் எனவும் அதிகாரியிடம் முதலமைச்சர் ஜெகன் தெரிவித்தார். அண்டை மாநிலமான ஒடிசாவில் கனமழை பெய்து வருவதால் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வம்சதாரா மற்றும் நாகவளி நதிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களை எச்சரித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.


பலத்த காற்று காரணமாக சில இடங்களில் மரம் விழுந்தள்ளது என்றாலும், மாநில அல்லது தேசிய நெடுஞ்சாலைகளுக்கு எந்த சேதமும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR