வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நேற்று கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த புயலுக்கு குலாப் (Cyclone Gulab) என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டு பியார் புயலும், 2018-ம் ஆண்டு டாயி புயலும் (Cyclone), அதனைத்தொடர்ந்து தற்போது குலாப் புயலும் வந்திருக்கிறது.
ALSO READ | Cyclone Gulab: ஒடிசாவை நாளை தாக்கும் புதிய புயல் குலாப்
இதற்கிடையே, மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த குலாப் புயல் மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி குலாப் புயல் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய பகுதிகளான விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது பலத்த காற்று வீசியது.
The landfall process of Cyclone Gulab has been completed. However, the system maintains its cyclonic storm intensity and is likely to move nearly westwards and weaken into a deep depression during the next 4-5 hours: Meteorological Centre, Visakhapatnam
— ANI (@ANI) September 26, 2021
இந்த தேவக புயல் காரணமாக ஆந்திராவைச் சேர்ந்த 2 மீனவர்கள் உயிரிழந்தனர், ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் கோராபுட், ராயகடா மற்றும் கஜபதி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 70 கிமீ வேகத்தில் இருக்கும் என்று வானிலை ஆய்வு இயக்குனர் எச்ஆர் பிஸ்வாஸ், புவனேஸ்வர் கூறியுள்ளார். அத்துடன் புயல் காரணமாக ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
"There is a possibility of extremely heavy rainfall in the districts of Koraput, Rayagada and Gajapati and the wind speed will remain 50 to 70 kmph," HR Biswas, Director Meteorological Department, Bhubaneswar (26.09)
— ANI (@ANI) September 26, 2021
இதற்கிடையில் புயல் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இன்று முதல் 29 ஆம் தேதி வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
ALSO READ | தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR