கேரள மாநிலம் கன்னூரில், அடையாளம் தெரியாத குழுவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை 9:30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் இத்தாக்குதலில் ஈடுப்பட்டவர்கள் கூர்மையான ஆயுதங்களை உபயோகித்து தாக்கியுள்ளனர் எனவும், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


பாதிக்கப்பட்ட சிபிஎம் தொண்டர் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கூடுதல் தகவல்களை சேகரிக்க, சம்பவ இடத்தில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக காவல் அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.


முன்னதாக நேற்று காலை மற்றொரு இந்திய-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் மற்றும் இந்திய-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளூர் அலுவலக பொறுப்பாளர் திரு சாஜூ மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் அவரது வீட்டிற்கு அருகே நடந்தது. இதனையடுத்து இன்றும் இதேப் போல் தாக்குதல் சம்பவங்கள் தொடர்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!



சமீப காலமாக கேரளாவில் அரசியல் வன்முறை சம்பவங்கள் தொடர்சியாக நடைப்பெற்று வருகின்றது. கடந்த 17 ஆண்டுகளில், இத்தகு வன்முறை சம்பவங்களில் இதுவரை 85 சிபிஎம் தொண்டர்கள், 65 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், காங்கிரஸ் மற்றும் ஐ.எம்.எல்.எல் 11 தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காவல்துறை கணக்கெடுப்பு காட்டுகிறது.