உத்தரப்பிரதேச மாநிலம் பயங்கரவாத தடுப்பு பிரிவு, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கியதரா கிராமத்திலிருந்து பங்களாதேஷை சேர்ந்த பயங்கரவாதி ஒருவரை கைது செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ANI இன் தகவல்களின்படி, அப்துல்லாவாக அடையாளம் காணப்பட்ட இவர் போலி அடையாள அட்டைகளை தயாரித்து, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கியதாக கூறப்படுகிறது.


இவர் பங்களாதேஷ் பயங்கரவாத குழுவான 'அன்சருல்லா பக்லா இயக்கத்துடன்' தொடர்புடையவர் என கூறபடுகிறது.


கடந்த ஒரு மாதகாலமாக அப்துல்லா முசாபர்நகரில் வசித்து வருகின்றார். முன்னதாக 2011 ல் சஹரான்பூரில் வாழ்ந்து வந்துள்ளார்.


ஆரம்பகட்ட விசாரணையின் படி, பங்களாதேஷ் பயங்கரவாதிகளுக்கு அப்துல்லா போலி அடையாள அட்டைகளையும், பாஸ்போர்ட்களையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார், இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக வாழந்து பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்க வழிவகுதுள்ளர்.


சஹரன்பூர், முசாபர்நகர் மற்றும் ஷாம்லி காவல்துறையினர் இவர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.