J&K: 2 தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சிறுவர்கள் கடத்தல்!
ஜம்மு காஷ்மீரில் இரு இளைஞர்களைக் கடத்திக் கொன்ற தீவிரவாதிகள், தற்போது சோபியான் மாவட்டத்தில் மேலும் ஒருவரைக் கடத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் இரு இளைஞர்களைக் கடத்திக் கொன்ற தீவிரவாதிகள், தற்போது சோபியான் மாவட்டத்தில் மேலும் ஒருவரைக் கடத்தியுள்ளனர்.
பாதுகாப்புப் படையினருக்கு உதவுபவர்கள் எனக் குற்றம்சாட்டி, குல்காமில் மட்டும் 6 இளைஞர்கள் கடத்தப்பட்டனர். அவர்களில், ஹூசைப் அஷ்ரப் என்ற இளைஞனை தீவிரவாதிகள் கழுத்தறுத்துக் கொன்று, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
வியாழன் அன்று 17 வயது சிறுவனை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் சோபியானில், சுஹைல் அகமது என்ற 23வயது இளைஞரை வீட்டிற்கு வெளியில் வைத்து தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். வியாழக்கிழமை தொடங்கி சோபியானில் நடைபெறும் ஏழாவது கடத்தல் சம்பவம் இதுவாகும். சோபியானில் இன்று இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.