ஹரியானா சட்டப் பேரவையில் மதமாற்றத்துக்கு எதிரான மசோதா நிறைவேறியது
ஹரியானா சட்டப் பேரவையில் மதமாற்றத்துக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி: ஹரியானா சட்டப் பேரவையில் மதமாற்றத்துக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவின் படி, கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சிப்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். 2022 மதமாற்றத் தடுப்பு மசோதாவிக்கு ஹரியானா அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25, 26, 27 மற்றும் 28 வது பிரிவின் கீழ் அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் இந்த மசோதா குறித்து கூறியிருந்தார். எந்த மதத்தையும் தேர்ந்தெடுக்கும் உரிமையும் சுதந்திரமும் மக்களுக்கு உண்டு. இதையும் மீறி, கட்டாய மதமாற்ற வழக்குகள் அரங்கேறி வருகின்றன, இதைக் கருத்தில் கொண்டு, ஹரியானா அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
மேலும் படிக்க | உலகில் காற்று மாசு அதிகம் கொண்ட தலைநகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் தில்லி..!!
மதமாற்ற எதிர்ப்பு மசோதாவுக்கான காரணங்கள்
ஹரியானாவில் கட்டாய மதம் மாற்றத்தை தடுக்க ஹரியானா மதமாற்ற தடுப்பு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவில், தவறான வகையில் தகவல்களை கொடுத்தோ, ஆதிக்கத்தின் மூலமாகவோ, வற்புறுத்தல், பேராசை காட்டு கட்டாய மத மாற்றம் செய்வது இப்போது குற்றமாகும். இந்த மசோதா மூலம் மக்களுக்கு மத சுதந்திரம் கிடைக்கும். இந்தியாவில் மதச்சார்பின்மை கொள்கைகளை நிலைநிறுத்துவதே இதன் ஒரே நோக்கமாக இருக்கும்.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன
ஹரியானாவில் மதமாற்றத் தடுப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசாங்கம் சமூகங்களை பிளவுபடுத்துவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளார். மதமாற்றத் தடுப்பு மசோதா செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டவுடன் காங்கிரஸ் தலைவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR