பெங்களூருவில் போலீசாரை கண்டித்து மாணவர்கள் போராட்டம் காரணமாக பதற்றம் நிலவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூரு நகரின் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகில் கல்லூரி ஒன்றில் கடந்த 13-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஷ்மீரிகள் சிலர் இந்திய ராணுவத்தினர், தங்களுக்கு தொந்தவு கொடுத்தாக கூறி ராணுவத்திற்கு எதிராக கோஷம் எழப்பினர். காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவிலிருந்து பிரிக்கும்படியும் கோஷமிட்டனர். 


ராணுவத்திற்கு எதிராக கோஷமிட்டதை கண்டித்தும், போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறியும் ஏபிவிபி அமைப்பினர் காலை ஆர்.சி என்ற கல்லூரி முதல் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்தனர். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணியாக வந்தனர். ராஜ்பவன் அருகே வரும் போது போலீசார் ஏபிவிபி அமைப்பினரை தடியடி நடத்தி கலைக்க முற்பட்டனர்.


அப்போது அந்த மாணவ அமைப்பினர் போலீஸ் வாகனம் மீது ஏறி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் ஏபிவிபி அமைப்பினர் போராட்டத்தினால் பதற்றம் நிலவுகிறது.