புனே திரைப்படக் கல்லூரி (FTII) தலைவர் பொறுப்பில் இருந்து பாலிவுட் பிரபலம் அனுபம் கேர் விலகினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி மையம் (Film and Television Institute of India) என்னும் பெயரில் திரைப்படக் கல்லூரி இயங்கி வருகிறது. இதன் தலைவராக கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தனது சொந்த பணி காரணமாக இந்தப் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.


மத்தியத் தகவல் ஒலிபரப்பு அமைச்சகர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோருக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ள அனுபம் கேர், இந்த கடிதத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக அமெரிக்காவில் ஒன்பது மாதத்துக்கு மேல் தங்கியிருக்க வேண்டியுள்ளதால் திரைப்படக் கல்லூரிக்காக நேரத்தைச் செலவிட முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.  



எதிர்வரும் காலத்தில் திரைப்பட கல்லூரிக்கு தனது சார்பில் ஏதேனும் பங்களிப்பு அளிக்கப்படவேண்டி தேவை வந்தால், தான் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


டெல்லி தேசிய நாடக பாடசாலையில் (NSD) பட்டதாரி பட்டம் பெற்ற இவர், 2004-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2016-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் பெற்றவர். பாலிவுட் திரை துறையில் பெறும் பங்காற்றிய இவர் 'Anupam Kher's Actor Prepares'-ன் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் என்படு குறிப்படுத்தக்கது.


தற்போது இவர் அமெரிக்காவில் New Amsterdam என்னும் தொலைக்காட்சி நாடகத்தில் பணியாற்றி வருகின்றார்.