AP Assembly Election Result 2024 : ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் ஆட்சியில் இருக்கும் ysr congress இந்த முறை படுதோல்வியை சந்தித்து ஆட்சியை இழக்கிறது. இப்படி ஓஹோ என கொடி கட்டிப்பறந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை இழக்க என்ன காரணம்? சந்திரபாபு நாயுடு சாதித்தது எப்படி?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2019-ம் ஆண்டு முதல்முறையாக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான  ysr congress கட்சி ஆந்திராவில் 151 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. வழக்கமாக இல்லாமல்   அமைச்சர்களின் பதவிக்காலம் 30 மாதங்கள், அரசு திட்டங்கள் மக்களை சென்று சேர 5 துணை முதலமைச்சர்கள் தேர்வு என அதிரடி காட்டினார் ஜெகன் மோகன் ரெட்டி. மக்கள் திட்டங்களில் உன்னிப்பாக கவனம் செலுத்தியது ஆந்திர அரசு. இதற்கு நடுவே தனது சகோதரி ஒய் எஸ் சர்மிளாவுடன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. அதனால் அவர் தனிக்கட்சி தொடங்கினார். 


இப்படி குடும்ப நெருக்கடி இருந்தாலும், தனது வழியில் சிறப்பாக செயல்பட்டார் ஜெகன் மோகன். ஆனால் அவர் செய்த ஒரு தவறு இப்போது அவருக்கு மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளது. அதுதான் சந்திரபாபு நாயுடுவின் கைது. இப்போதைய நிலவரப்படி தெலுங்கு தேசம் கட்சி 127 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  ysr congress கட்சி வெறும் 24 இடங்களில் தான் முன்னிலை வகிக்கிறது. 


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆந்திர பிரதேச திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 300 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக சிஐடி சந்திர பாபு நாயுடுவை கைது செய்தது. கிட்டதட்ட 2 மாதங்கள் அவர் சிறையில் இருந்தார். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்தால் அரசியல் சதுரங்கத்தை அழகாக ஆடினார். ஆங்காங்கே சிதறி இருந்த எதிர்கட்சிகளை தனது அணியில் திரட்டினார். பவன் கல்யாணிடம் சென்று பேசி கூட்டணிக்கு அழைத்தார். பாஜகவையும் கூட்டணியில் வைத்துக்கொண்டார். இப்படி மாஸ்டர் பிளான் போட்டு அசத்தினார். 


மேலும் படிக்க | AP Elections 2024 Result : ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாஷ் அவுட்! அரியணை ஏறும் தெலுங்கு தேசம் கட்சி..


ஆந்திர மக்கள் சந்திரபாபு நாயுடுவின் கைதை ஏற்கவில்லை. அது ஜெகன் மோகன் ரெட்டிக்கு பலத்த அடியை கொடுத்தது. மக்கள் அவர் மீது கோபம் கொண்டார்கள். ஏற்கனவே தலைநகரை அறிவிப்பதில் அவர் செய்த சொதப்பல், இந்த கைது நடவடிக்கையால் மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே ஒரு கைது ஒட்டுமொத்த நல்ல பெயரையும், நலத்திட்டங்களையும் ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டது. இந்த தாக்கம் தான் ஆட்சியை இழக்க வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டது. 


பெரிய அளவு விமர்சனங்களை  ysr congress சந்திக்காமல் இருந்தாலும், சந்திரபாபு நாயுடுவின் கைது என்ற ஒற்றை விஷயம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியது. அதன் பலனாக தற்போது ஆட்சியை இழந்துள்ளது. உண்மையை சொல்லபோனால்  ysr congress கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது என்பதே உண்மை.


மேலும் படிக்க | Chandrababu Naidu : ஆந்திராவின் புதிய முதல்வர் சந்திரபாபு நாயுடு! அறிந்ததும் அறியாததும்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ