அப்துல் கலாம் நினைவு அருங்காட்சியகம் இன்று திறப்பு!!
‘டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்’ இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நினைவாக, கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு ‘டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ளது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
அப்துல் கலாமின் கோட்பாடுகளை பிரபலப்படுத்தும் அமைப்பான டாக்டர் கலாம் ஸ்மிருதி இண்டர்நேஷனல் மூலம் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.