தற்போது இந்திய ரயில்வே துறையில் அறிவித்திருந்த 90 ஆயிரம் பணியிடங்களுக்கு சுமார் 2.8 கோடி பேர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளது இந்திய ரயில்வே துறை அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் மிகப் பெரிய வேலைவாய்ப்புத் துறையாக விளங்குவது இந்தியன் ரயில்வே துறை. தற்போது, அதில் சுமார் 13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்ஜின் ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாளர்கள், தச்சர்கள், ரயில்பாதை கண்காணிப்பு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடு தொடர்பான பல்வேறு பணிகளுக்காக ஏறத்தாழ 90 ஆயிரம் பணியிடங்களுக்கு பணியாளர்கள் சேர்க்கும் பணியை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது.


இந்தப் பணிகளை நிரப்ப, ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மாதம் விளம்பரம் வெளியிட்டது. இந்நிலையில் 90 ஆயிரம் பணியிடங்களுக்கு 2.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். 


இதை தொடர்ந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.